24 மணி நேரத்தில் பருவமழை: முதல் 2 நாட்கள் படு ஜோர்!

Webdunia
புதன், 31 அக்டோபர் 2018 (14:37 IST)
வடகிழக்கு பருவமழை இன்று துவங்கும் நாளை துவங்கும் என கூறப்பட்டு வந்த நிலையில் ஒரு வழியாக நாளை முதல் துவங்கவுள்ளது. 
 
அடுத்து 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என,  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. 
 
அதேபகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை துவங்கும்.
 
அதன் பின்னர் வடகிழக்கு பருவமழை தமிழகத்தின் மற்ற இடங்களுக்கும் அடுத்து கேரளா, தெற்கு கர்நாடகா பகுதிகளை அடையும். கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், பருவமழை துவங்கிய முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மழை சற்று ஜோராக இருக்கும் என தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

100% சொத்து வரி உயர்வு.. ஆர்ப்பாட்டம் தேதியை அறிவித்த அதிமுக..!

அடுத்த கட்டுரையில்
Show comments