Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையில் வருமான வரித்துறை சோதனை.. ரூ.17.80 லட்சம், 2,250 கிராம் நகைகள் பறிமுதல்

Mahendran
வியாழன், 11 ஏப்ரல் 2024 (11:30 IST)
நெல்லை தொகுதியில் வருமான வரித்துறை சோதனை செய்ததில் ரூ.17.80 லட்சம், 2,250 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தலை ஒட்டி நெல்லை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இதுவரை நெல்லையில் வருமான வரித்துறை சோதனையின் போது ரூ.17.80 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 2,250 கிராம் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக, தேர்தல் ஆணையத்திடம் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சமீபத்தில் நெல்லைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் ரொக்க பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லை தொகுதி என்பது விஐபி தொகுதியாக கருதப்படும் நிலையில் அந்த தொகுதியில் தான் அதிக  பண நடமாட்டம் நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments