தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரேகட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரப்பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக கூட்டணியில் இணைந்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அவர் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், திமுக கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன், சிதம்பரம் புறவழிச்சாலையில் உள்ள நடேசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 5 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் மாலை 6:30 மணியளவில் திடீரெ சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வீட்டின் உரிமையாளர் நாளை மதியம் வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அளித்துவிட்டுச் சென்றனர். இது அக்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.