Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பழிவாங்கும் முனைப்பில் மோடி அரசு ... முக. ஸ்டாலின் கடும் தாக்கு..

பழிவாங்கும் முனைப்பில் மோடி அரசு ... முக. ஸ்டாலின் கடும் தாக்கு..
, திங்கள், 4 பிப்ரவரி 2019 (13:22 IST)
திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள  ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று கிராம சபை கூட்டம் நடத்தி வருகிறார். இதில் ஸ்டாலின்  மகன் உதயநிதி ஸ்டாலினும் கலந்து கொண்டு மக்கள் குறைகளை கேட்டு வருகின்றார். இந்நிலையில் மதுரை மாவட்டம்  தனக்கன் குளம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்ட பின்னர் பேசியதாவது:
லஞ்சம் மற்றும் ஊழல்களால் தான் ஐந்தாண்டு கால ஆட்சி நடைபெற்றதாகக் குற்றம் சாட்டினார். தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசையும், மத்தியில் உள்ள மோடி அரசை  அகற்றவே தான் மக்களை தேடி வந்துள்ளதாகக் கூறினார். 
 
மேலும், இரும்புப் பெண்மணி மற்றும் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜியை பழிவாங்குவதற்காகவே பல சிரமங்களை மோடி ஏற்படுத்தி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
 
இந்நிலையில் மேற்கு வங்க பிரச்சனையை விவாத்துக்கு விவாதத்துக்கு ஏற்க மருத்ததால்தான் நாடாளுமன்ற திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.அதனால் கடந்த வெள்ளிக்கிழமை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது.
 
இதனையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனால் அவையில் சிறிது நேரம் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது. பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் தலைவருக்கு விஜயகாந்த் வாழ்த்து