ரஜினியுடன் கூட்டணியா? பிரதமர் மோடி செம பதில்

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (19:00 IST)
பாரதிய ஜனதா கட்சி செயற்பாட்டாளர்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸிங் வழியாக இன்று உரையாற்றினார் நரேந்திர மோடி. இதில் அரக்கோணம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பாஜக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 
அதில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் கேட்ட கூட்டணி குறித்த கேள்விக்கு கூட்டணிக்கான நமது கதவுகள் திறந்தே உள்ளன என பதில் அளித்து உள்ளார்.
 
அடுத்து, ரஜினி, அதிமுக ஏன் திமுகவுடன் கூட பாஜக கூட்டணி வைக்க உள்ளது என்பது போன்ற செய்திகள் உலவுகின்றவே என்ற கேள்விக்கு மோடி சிரித்தப்படி பதில் அளிக்க தொடங்கினார்.
 
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாஜ்பேயி வெற்றிகரமான கூட்டணி அரசியலை முன்னெடுத்தார். அதுவரை காங்கிரஸ், மாநில கட்சிகளின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்தது. அவர்களை மிக மோசமாக கூட நடத்தியது. திமிர்தனத்துடன் நடந்து கொண்டது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி மாநில கட்சிகளை மதித்தது.
நாம் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பின்னரும் கூட, கூட்டணி கட்சிகளை சேர்த்து கொண்டுதான் ஆட்சி அமைத்தோம். எப்போதும் நம் கதவுகள் கூட்டணி கட்சிகளுக்காக திறந்தே உள்ளன. இதையெல்லாம் கடந்து மக்களுடனான கூட்டணிதான் நம்பிக்கையான கூட்டணி என்று பதில் அளித்துள்ளார். ஆனால், கடைசி வரை கேட்கப்பட்ட கேள்விக்கு நேரடியான பதிலை அளிக்கவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சர்க்கரை நோயின் மாத்திரைகள் தரம் குறைந்தவைகளா? திரும்ப பெற உத்தரவு..!

சட்டமன்ற தேர்தலுக்கு முன் வரும் ராஜ்யசபா தேர்தல்.. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பது யார்?

அதிமுக இடத்தை விஜய் பிடித்துவிடுவாரா? மீண்டும் திமுக ஆட்சியா? அரசியல் விமர்சகர்களின் கணிப்பு..!

விஜய்யின் தவெக 20 தொகுதிகளில் தான் வெற்றி பெறுமா? அதிமுக, திமுகவின் நிலை என்ன?

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அடுத்த கட்டுரையில்
Show comments