Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை 10 மாவட்டங்களில் மழை கொட்டும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Mahendran
திங்கள், 16 ஜூன் 2025 (15:18 IST)
தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் இன்று மாலை மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று தமிழகத்தில் அரியலூர், நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்றும் பத்து மாவட்டங்களுக்கு மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடந்தே அலுவலகம் சென்ற டிஎஸ்பி சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. மருத்துவமனையில் அனுமதி..!

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: நடைப்பயணம் தொடங்குகிறார் அன்புமணி..!

ரூ.14.69 கோடி போதை பொருளை கடத்தில் இளம்பெண்கள்.. சோப்புகளில் மறைத்து கடத்தல்..!

நாம வேலை பாக்கதான் வந்திருக்கோம்.. அவங்கள குஷிப்படுத்த இல்ல! - கார்ப்பரேட் டான்ஸ் வீடியோவிற்கு வலுக்கும் கண்டனம்!

அரசியலை விட்டு விலக தயார்.. ராகுல் காந்திக்கு சேலஞ்ச்.. குஷ்பு பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments