தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

Mahendran
வெள்ளி, 5 டிசம்பர் 2025 (14:41 IST)
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்று  திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இன்று தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
நாளை முதல் டிசம்பர் 11 வரை   மிதமான மழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

திருப்பரங்குன்ற விவகாரம்!.. அமைதியாக இருக்கும் விஜய்!.. காரணம் என்ன?..

அமித்ஷாவுன் சந்திப்பு ஏன்?.. ஓப்பனாக சொல்லிட்டாரே ஓபிஎஸ்!...

ஜெயலலிதா நினைவு நாளில் அஞ்சலி செலுத்திய தவெக கட்சியினர்.. செங்கோட்டையன் வரவால் மாற்றமா?

2வது நாளாக குறைந்த தங்கம் விலை.. ஆனாலும் ரூ.96,000க்கு குறையவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments