தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக, அமமுகவுடன் பேசி வருவது குறித்து மய்யம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் தேமுதிக மூன்று கட்டமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது.
இந்நிலையில் தேமுதிக வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தேமுதிகவை மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ் கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அமமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் பொன்ராஜ் “நாங்கள் அழைப்பு விடுத்தோம். தேமுதிகவிலிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர்கள் எங்கே போக வேண்டுமோ அங்கே போய் விட்டார்கள்” என கூறியுள்ளார்.