Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"வெங்காயம் இலவசமாக தந்ததால் உயர்ந்த செல்போன் விற்பனை": தஞ்சாவூர் கடைக்காரரின் அசத்தல் யோசனை

, ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (15:37 IST)
வழக்கமாக ஒரு மொபைலுக்கு என்னவெல்லாம் இலவசமாக தருவார்கள்? ஹெட்ஃபோன், டெம்பர் கிளாஸ். அதிகபட்சமாக போனால் மெமரி கார்ட், இதுதானே தருவார்கள்.
ஆனால், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இந்த செல்ஃபோன் கடை உரிமையாளர் ஸ்மார்ஃபோன்களுக்கு இலவசமாக ஒரு கிலோ வெங்காயத்தை தருகிறார்.
 
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? வெங்காயம் இலவசமாக தர தொடங்கியவுடன், விற்பனை 5 மடங்கு உயர்ந்துவிட்டதாக அந்த கடையின் உரிமையாளர் கூறுகிறார்.
 
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே இருக்கிறது எஸ்.டி.ஆர். மொபைல் கடை. இங்குதான் கடந்த இரண்டு நாட்களாக ஒரு ஸ்மார்ட் ஃபோன் வாங்கினால் ஒரு கிலோ வெங்காயம் இலவசமாகத் தரப்படுகிறது.
 
கடையின் உரிமையாளர் சரவணக்குமார், "எங்களின் வேதனையை வெளிப்படுத்துவதற்காக இவ்வாறாக அறிவித்தோம்," என்கிறார்.
 
பட்டுக்கோட்டை பகுதியில் ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்க்கு விற்கிறது என்று சொல்லும் அவர், "மெமரி கார்டுகளும் இதே விலைதான். மக்களுக்கு இப்போது தேவை வெங்காயம்தான். மெமரி கார்டோ அல்லது ஹெட்ஃபோனோ அல்ல. அதனால்தான் இவ்வாறாக அறிவித்தோம்," என்கிறார்.
 
ஒரு நாளைக்கு வழக்கமாக அவர் கடையில் இரண்டு, மூன்று ஸ்மார்ட் ஃபோன்கள் விற்பனை ஆகுமாம். இந்த அறிவிப்புக்கு பிறகு விற்பனை 5 மடங்கு அதிகரித்துள்ளது என்கிறார்.
 
"கடந்த இரண்டு நாட்களாக தினசரி 15 மொபைல்களுக்கு மேல் விற்பனையாகி உள்ளது," என்கிறார் சரவணக்குமார்.
 
தமிழகம் முழுவதும் பரவலாக கிலோ ரூ 200-க்கு வெங்காயம் விற்கப்படுகிறது.
 
மதுரையை சேர்ந்த மூர்த்தி எனும் வியாபாரி, "வழக்கமாக ஐந்து கிலோ வெங்காயம் வாங்கும் வாடிக்கையாளர்கள் எல்லாம் இப்போது இரு கிலோதான் வாங்குகிறார்கள்," என்று கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை கூறுகிறது.
 
இதற்கு மத்தியில் வெங்காயம் மூட்டைகளைத் திருடியதாகப் பாண்டிச்சேரியில் சக்திவேல் எனும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐதராபாத், உன்னாவ் தொடர்ந்து மீண்டும் ஒரு பெண் எரித்து கொலை: