Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரிசார்ட்டிலிருந்து வெளியேறிய எம்எல்ஏ பழனியப்பன் திரும்பி செல்லவில்லையாம்: காரணம் தெரியுமா?

ரிசார்ட்டிலிருந்து வெளியேறிய எம்எல்ஏ பழனியப்பன் திரும்பி செல்லவில்லையாம்: காரணம் தெரியுமா?

Advertiesment
ரிசார்ட்டிலிருந்து வெளியேறிய எம்எல்ஏ பழனியப்பன் திரும்பி செல்லவில்லையாம்: காரணம் தெரியுமா?
, சனி, 26 ஆகஸ்ட் 2017 (10:26 IST)
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19-இல் இருந்து தற்போது 21-ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க தினகரன் அணியில் உள்ள முன்னாள் அமைச்சரும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏவுமான பழனியப்பன் களமிறக்கப்பட்டுள்ளார்.


 
 
தினகரனுக்கு ஆதரவான 19 எம்எல்ஏக்கள் சில தினங்களுக்கு முன்னர் ஆளுநரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கடிதம் கொடுத்துவிட்டு புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த அணியில் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசாமி இணைந்தார். மேலும் நேற்றிரவு தினகரனை அவரது வீட்டில் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
 
இதன் மூலம் தற்போது தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 21-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்க தினகரன் தர்ப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி எம்எல்ஏவுமான பழனியப்பன் களமிறக்கப்பட்டுள்ளார். விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டிலிருந்து நேற்று மதியம் வெளியேறிய எம்எல்ஏ பழனியப்பன் திரும்ப விடுதிக்கு வரவில்லை.
 
இதனையடுத்து எம்எல்ஏ பழனியப்பனை கண்காணிக்க காவல்துறைக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி தரப்பு எம்எல்ஏக்களிடம் விலை பேசி, தினகரன் தரப்புக்கு இழுக்கும் வேலை பழனியப்பனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அவர் விடுதிக்கு திரும்ப செல்லவில்லை.
 
பழனியப்பன் வலையில் முதலாவதாக விழுந்திருப்பவர்தான் விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன். இதனால் பழனியப்பன் மீது கூடுதல் கவனம் செலுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் மாற்றமா? ஆளுநர் ஆட்சியா?: பரபரக்கும் தமிழக அரசியல் சூழல்!