Publish Date: Sat, 01 Jan 2022 (12:47 IST)
Updated Date: Sat, 01 Jan 2022 (12:49 IST)
சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென கனமழை பெய்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சென்னை கனமழையை முன்னரே கணிக்க தவறியது ஏன் என வானிலை ஆய்வு மையத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் அளித்த விளக்கத்தில் ஆய்வு மையத்திற்கு தேவையான வசதிகள், நவீன உபகரணங்கள் இல்லாததால் மழையை கணிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும், நவீன உபகரணங்கள், வசதிகளை ஏற்படுத்தி தரவும் கோரிக்கை விடுத்துள்ளார்.