Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார்: பெரியார் குறித்து முக ஸ்டாலின் டுவீட்

Advertiesment
சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார்: பெரியார் குறித்து முக ஸ்டாலின் டுவீட்
, வெள்ளி, 17 ஜூலை 2020 (12:56 IST)
பெரியார் குறித்து முக ஸ்டாலின் டுவீட்
தமிழகத்தில் பெரியார் சிலைகளை அவ்வப்போது மர்ம நபர்கள் உடைத்தும் அவமதிப்பும் வரும் நிலையில் இன்று காலை கோவை மாவட்டம் சுந்தராபுரம் என்ற பகுதியில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் காவிச்சாயம் ஊற்றி அவமதிப்பு செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
 
இதனைக் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்டது குறித்து பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்! அதனால்தான் அவர் பெரியார் என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர் இது குறித்து மேலும் கூறியதாவது:
 
என் மீது செருப்பு வீசப்பட்ட இடத்தில்தான் சிலை வைக்கப்பட்டு இருக்கிறது என்றவர் தந்தை பெரியார்! தன் படத்தை எரிக்க நினைத்தவருக்கு அச்சிட்டுக் கொடுத்தார்; எதிர்க் கேள்விகளை எழுதியவருக்கு தன் பேனாவைக் கொடுத்தார். அதனால் அவர் பெரியார்! சிறியார்க்கும் சேர்த்தே உழைத்தார் பெரியார்!

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவிடம் ஜகா வாங்கி, அமெரிக்காவிடம் சரணடையும் Tik Tok?