Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிபிஎஸ்இ-யில் பெரியார் பாடங்களை நீக்குவதா? ஜோதிமணி எம்பி ஆவேசம்

Advertiesment
சிபிஎஸ்இ-யில் பெரியார் பாடங்களை நீக்குவதா? ஜோதிமணி எம்பி ஆவேசம்
, செவ்வாய், 14 ஜூலை 2020 (18:57 IST)
கொரோனா வைரஸ் காரணமாக சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 30% பாடங்கள் குறைக்கப்படும் என சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்தது என்பதும் சில பாடங்கள் குறைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதில் மத்திய அரசு குறைக்கப்பட்டதாக கூறிய பாடங்களுக்கு ஒரு சில கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக மதநல்லிணக்கம் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டதற்கு பல மாநில முதல்வர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சிபிஎஸ்சி தமிழ் பாடத்தில் பெரியார் சிந்தனைகள் உள்பட ஒருசில பாடங்கள்  நீக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல்வாதிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் காங்கிரஸ் பிரமுகரும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது டுவிட்டரில் இது குறித்து கூறியிருப்பதாவது:
 
சி.பி.எஸ்.இ  9 &10  வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பெரியார் சிந்தனைகள், இந்திய தேசிய இராணுவத்தில் தமிழரின் பங்கு, திருக்குறள் உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்த்து பிஜேபி ஏன் பயப்படுகிறது? தமிழர்களின் வரலாற்றை, தியாகத்தை ஏன் அழிக்க முற்படுகிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் வகுப்புகள்: விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு