திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிண்டலடித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் முதலாக இந்தியா முழுவதும் பரவிய கொரோனா வைரஸால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போதிலும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்தன தற்போது கர்நாடகா மற்றும் உத்தர பிரதேசத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் கொரோனா சமூக பரவலை எட்டிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டு அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், சமூகப் பரவல் கட்டத்தை அடைந்து விட்டதாக IMA தலைவர் Dr. வி.கே.மோங்கா எச்சரிக்கிறார். கேரள முதல்வரும் ஒத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சீனாவையே சென்னை தாண்டிய பிறகும், அமைச்சர்களே பாதிக்கப்பட்ட பிறகும் 'கீறல் விழுந்த ரெக்கார்டாக’ சமூகப்பரவல் இல்லை என்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என கலாய்த்து பதிவிட்டுள்ளார்.