இன்று குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அனைத்து மாநில எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டு எம்.பி, எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க சென்னை தலைமை செயலகத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டிஸ்சார்ஜ் ஆகிறார். டிஸ்சார்ஜ் ஆன கையோடு நேரடியாக அவர் தலைமை செயலகம் சென்று தனது வாக்கை செலுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.