அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யும்போது பெண் இறந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் ஒருவர் அதற்கு பின் கர்ப்பமானதால் ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குடும்ப கட்டுப்பாடு மற்றும் அதுதொடர்பாக வழங்கப்படும் இழப்பீடுகள் குறித்து விளக்கமளித்த தமிழக அரசு “அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்யும்போது பெண் இறந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கருத்தடை செய்த பின் ஒரு மாத காலத்திற்குள் இறந்தால் தரப்படும் இழப்பீடு தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளது.