இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் பல அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற எம்.பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல்.திருமாவளவனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கூட்டணி கட்சி தலைவர்களும், பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
நேற்று மாலை திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “கலைஞர் கருணாநிதி எவ்வளவோ சொல்லியும் கூட திருமாவளவன் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். கலைஞர் சொல்லி திருமா செய்யாதது அது ஒன்றுதான். இன்று இருப்பது போல 30 வருடங்களுக்கு முன்பு நானும், திருமாவும் நெருக்கமாக இருந்திருந்தால், அன்றே அவருக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், திருமா தனது கட்சியையே மனைவியாகவும், தொண்டர்களை குழந்தைகளாகவும் பாவிப்பதாக கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், திருமாவுடனான இந்த கூட்டணி தேர்தல் நட்பு அல்ல, கொள்கையால் இணைந்த கூட்டணி என்றும் தெரிவித்துள்ளார்.