Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா பக்கம் நின்ற ஸ்டாலின்: தேர்தல் ஆணையத்திற்கு அட்வைஸ்!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (12:18 IST)
அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் ஸ்டாலின் டிவிட்டர் பதிவு. 

 
மேற்கு வங்க மாநிலத்தில் 4 கட்ட தேர்தல் முடிந்து விரைவில் ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று திடீரென தேர்தல் ஆணையம் வெளியிட்ட உத்தரவு ஒன்றில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு 8 மணி முதல் இன்று இரவு 8 மணி வரை 24 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்ய தடை விதிப்பதாக அறிவித்தது.
 
இதனை அடுத்து திரிணாமுல் கட்சி தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் தனக்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தர்ணா போராட்டம் நடத்த உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார், அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். ஒருசார்பின்மை, நடுநிலை கடைபிடிக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறைக்கைதியுடன் மசாஜ் சென்டர் சென்ற காவலர்கள்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இன்று முதல் அமல்படுத்தப்படும் யு.பி.ஐ., புதிய விதிகள்.. பண பரிவர்த்தனை செய்ய என்னென்ன கட்டுப்பாடு?

Union Budget 2025-26 Live: மத்திய பட்ஜெட் 2025-26 நேரலை!

எம்ஜிஎம் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு! - 500-க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு!

திருமா அண்ணன்கிட்ட கத்துக்கிட்ட விஷயத்தை விஜய் கட்சியில் செய்வேன்! - ஆதவ் அர்ஜூனா பேட்டி!

அடுத்த கட்டுரையில்
Show comments