Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆமணக்கு எண்ணெய்யின் அற்புத பயன்கள் !!

Advertiesment
ஆமணக்கு எண்ணெய்யின் அற்புத பயன்கள் !!
விளக்கெண்ணெயின் நன்மைகள் பற்பல. ஆமணக்கு எண்ணெயில் நிறைந்திருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் முகத்தில் ஏற்படும் பரு, வடு ஆகியவற்றை போக்க  உதவும்.

ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி, பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும். ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும்.
 
1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி மஞ்சள் ஆகியவற்றை கலந்து சருமத்தில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும். இது வெண்மையான மற்றும் ஒளிரும் சருமம் பெற உதவும்.
 
ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.
 
பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.
 
ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும். சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி,  போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.
 
1 தேக்கரண்டி ஆமணக்கு எண்ணெய் மற்றும் அரை தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை கலந்து, சருமத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறதா பயத்தங்காய் !!