Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் சொல்ல சொல்ல முதல்வர் செய்றார்! – மு.க.ஸ்டாலின் பேச்சு!

Webdunia
ஞாயிறு, 22 நவம்பர் 2020 (09:20 IST)
தமிழகத்தில் பல்வேறு திட்டங்களையும் தான் சொல்ல சொல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்வதாக மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட நிலையில், இடஒதுகீட்டின் மூலம் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் மருத்துவ படிப்பு செலவுகளை அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் மாணவர்களின் மருத்துவ படிப்பு செலவுகளை திமுக ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மாணவர்களின் படிப்பு செலவை அரசே ஏற்கும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதுகுறித்து திமுக காணொளி காட்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், மாணவர்களின் கல்வி செலவை ஏற்ற முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் பல பிரச்சினைகளில் திமுக வெளியிடும் அறிக்கைக்கு பிறகே அரசு செயல்படுவதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments