வேலை மனுவுடன் தங்க சங்கிலியை நிதியாக தந்த பெண்! – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (15:25 IST)
மேட்டூரில் வேலை கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்த இளம்பெண் ஒருவர் தன்னுடைய தங்க சங்கிலியை கொரோனா நிதியாக அளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களின் விவசாய பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்காக மேட்டூர் சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி தண்ணீரை திறப்பை தொடங்கி வைத்தார்.

பின்னர் வரும் வழியில் மேட்டூரை சேர்ந்த சௌமியா என்ற இளம்பெண் தனக்கு வேலை கேட்டு ஒரு மனுவும், கூடவே கொரோனா நிவாரண நிதிக்காக தனது தங்க சங்கிலியையும் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நெகிழ்ந்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “மேட்டூர் அணையைத் திறக்கச் சென்றபோது பெறப்பட்ட மனுக்களில் சகோதரி சௌமியாவின் இக்கடிதம் கவனத்தை ஈர்த்தது. பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த அவரது எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. பொன்மகளுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments