Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரிலிருந்து இறங்கி மக்களுக்கு மாஸ்க் மாட்டிவிட்ட முதல்வர்! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (15:16 IST)
கொரோனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாமல் சென்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ்க் அணிவித்தது வைரலாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் டெல்டா மற்றும் ஒமிக்ரான் தொற்றுகள் வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாஸ்க் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் மக்கள் பலர் மாஸ்க் அணியாமல் அலட்சியம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அண்ணா சாலையில் முதல்வர் காரில் சென்று கொண்டிருந்தபோது மக்கள் பலர் மாஸ்க் அணியாமல் சென்றுள்ளனர். இதை பார்த்ததும் காரை விட்டு இறங்கி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் மாஸ்க் அணியாதவர்களுக்கு மாஸ்க் அணிவித்துள்ளார், தடுப்பூசி போடுமாறும், மாஸ்க் அணியுமாறும் அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

20லி குடிநீர் கேன்களை 50 முறைகளுக்கு பயன்படுத்தினால்... உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை..!

திருமலை திருப்பதி கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

ஸ்டாலின் கூட்டும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கை குழு..மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments