Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயியாக இருக்க வேண்டிய அவசியமில்லை! – எடப்பாடியாருக்கு ஸ்டாலின் பதில்!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (13:31 IST)
விவசாய மசோதா விவகாரத்தில் ‘ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்?” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக அரசு மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளது. தமிழக முதல்வரின் இந்த முடிவை விமர்சித்து பேசிய மு.க.ஸ்டாலின் “முதல்வர் தன்னை இனி விவசாயி என அழைத்துக் கொள்ள கூடாது” என பேசியிருந்தார்.

மு.க.ஸ்டாலின் கருத்துக்கு எதிராக கேள்வியெழுப்பிய முதல்வர் “மு.க.ஸ்டாலினுக்கு விவசாயம் பற்றி என்ன தெரியும்?” என கேட்டுள்ளார். முதல்வரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள மு.க.ஸ்டாலின் “மத்திய அரசின் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்து கருத்துகளைச் சொல்ல விவசாயியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. வேளாண்மை பற்றிய அடிப்படை அறிவும், விவசாயிகள் நலனில் அன்பும் அக்கறையும் இருந்தாலே போதுமானது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments