மிக விரைவில் சென்னையில் புறநகர் ரயில் சேவை!!

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2020 (12:54 IST)
சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என ரயில்வேதுறை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. 
 
குறிப்பாக பேருந்து போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயக்கம், சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டது.  ஆனால், சென்னையில் லோகல் டிரைன் (புறநகர் ரயில் சேவை ) இல்லாதது பெரும் கவலையாக இருந்து வருகிறது. 
 
இந்நிலையில், சென்னையில் புறநகர் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என ரயில்வேதுறை டிஐஜி அருள் ஜோதி தெரிவித்துள்ளார். மேலும், அவர் ரயில் பயணிக்கும் போது பயணிகளுக்கு கொரோனா பாதிக்காமல் இருக்க பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளார். 
 
எனவே மிக விரைவில் அதாவது அநேகமாக அக்டோபர் முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானில் தொடர் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி, எஸ்.பி. படுகாயம்

2026 தேர்தலில் விஜய் வெற்றி பெறுவாரா? வைகோவின் கணிப்பு..!

6 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரின் ஆணுறுப்பை வெட்டிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம்..

ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டர்! தேஜஸ்வி யாதவ் கொடுத்த அதிரடி வாக்குறுதி..!

திடீரென வைரலாகும் அண்ணாமலையில் வைரல் வீடியோ.. அப்படி என்ன செய்தார்?

அடுத்த கட்டுரையில்
Show comments