தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் அமமுக கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து அமமுக பொருளாளர் கருத்து கூறியுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அமமுகவினர் சசிகலாவின் விடுதலையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் திடிர் பயணமாக டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா விடுதலை குறித்த வேலைகளில் டிடிவி தினகரன் ஈடுபட்டிருப்பதாக ஒரு பக்கமும், மற்றொரு பக்கம் பாஜகவோடு டிடிவி கூட்டணி வைக்க பேசி வருவதாகவும் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள அமமுக பொருளாளர் வெற்றிவேல் “தினகரன் எதற்காக டெல்லி சென்றார் என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் சசிகலா விடுதலையானதும் அதிமுக – அமமுக இணைப்பு பணிகளை மேற்கொள்வார். பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து சசிகலா, டிடிவி தினகரன் சேர்ந்தே முடிவெடுப்பார்கள். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என உறுதியாக சொல்ல முடியாது” என்று கூறியுள்ளார்.
இதனால் அமமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க விருப்பம் இருப்பதாகவும், எனினும் இதுகுறித்து சசிகலா வெளியான பின்பே தெரிய வரும் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.