Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊட்டியில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

Advertiesment
ஊட்டியில் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!
, சனி, 21 மே 2022 (10:32 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

 
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கு வந்த ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மறைந்து 31 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. 
 
ராஜீவ் காந்தி மறைந்து 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தால் நாட்டின் பல்வேறு பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா, பிரியங்கா காந்தி மரியாதை செலுத்தினர்.
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமான டிக்கெட்: 15 லட்ச ரூபாய்க்காக தனியார் உதவியை எதிர்பார்க்கும் இலங்கை அரசு