Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள்: அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்

பீகார் தேர்தல் முறைகேடு புகார்கள்: அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்
, புதன், 11 நவம்பர் 2020 (12:38 IST)
மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைக்கேடு புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது என பீகார் தேர்தல் குறித்து ஸ்டாலின் அறிக்கை. 
 
சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி 110 இடங்களில் வெற்றி பெற்று பின் தங்கியுள்ள நிலையில் பாஜக கூட்டணி 125 இடங்களை பிடித்து பெரும்பான்மையை தாண்டியுள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், 
 
பீகார் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் முதலர் நிதீஷ்குமாருக்கு வாழ்த்துக்கள். பீகாரின் இளம் தலைவராக உருவெடுத்து மக்களின் ஆதரவோடு உயர்ந்துவரும் தேஜஸ்வி யாதவ் தலைமையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அந்த மாநிலத்தின் ஜனநாயகத்திற்கு நல்ல உயிரோட்டத்தையும், துடிப்பான ஊக்கத்தையும் அளித்திடக்கூடியது. 
 
கொரோனா காலத்தில் பீகார் சட்டமன்ற தேர்தலையும், பல மாநிலங்களில் இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் நடத்தி இருப்பது இந்திய ஜனநாயகத்தின் வலிவையும், பொலிவையும் காட்டுகிறது. ஆனால், மகாகத்பந்தன் கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைக்கேடு புகார்கள் அதிர்ச்சி அளிக்கிறது. 
 
தேர்தல்கள் எந்தவித தலையீடுமின்றி, நியாயமாக, நடுநிலையுடன், சுதந்திரமாக நடத்தப்பட வேண்டும் என்பது ஒவ்வொரு குடிமகனின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு வந்த ஓடிடி தளங்கள்! – இனி சென்சார் செய்யப்படுமா?