தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று நள்ளிரவு டெல்லி சென்ற நிலையில் இன்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீட்தேர்வு விலக்கு, தேசிய பேரிடர் நிதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் மோடி அமித்ஷாவுடன் கலந்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது
இதனை அடுத்து வரும் ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா கலைஞர் அறிவாலயத்தை முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்பதும் அதன் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பாஜகவுக்கு எதிரான பிரமாண்டமான கூட்டணி அமைக்க அவர் முயற்சி செய்வார் என்றும் கூறப்படுகிறது