Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடநாடு விவகாரம் குறித்து கவர்னரிடம் பேசியது என்ன? மு.க.ஸ்டாலின்

கொடநாடு விவகாரம் குறித்து கவர்னரிடம் பேசியது என்ன? மு.க.ஸ்டாலின்
, திங்கள், 14 ஜனவரி 2019 (20:17 IST)
கொடநாடு விவகார வீடியோ விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதுகுறித்து புகார் மனு ஒன்றை அளிக்க இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக எம்பி கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் இருந்தனர்.

கவர்னரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியபோது, 'கொடநாடு வீடியோ விவகாரத்தில் முதலமைச்சர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து ஆளுநரிடம் தெரிவித்தேன். இந்த விவகாரத்தில் பின்னணியில் இருந்து யாரும் இயக்கவில்லை.

இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை செய்வேன் என ஆளுநர் உறுதியளித்துள்ளார். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் தொடர்பாக நேர்மையான ஐ.ஜி ஒருவர் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அமைக்க உத்தரவிட ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஒருவேளை இதுகுறித்து ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், குடியரசுத்தலைவரை திமுக எம்.பி.க்கள் சந்திப்பார்கள்

webdunia
மேலும் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வரை தொடர்புபடுத்தி குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இந்த குற்றம் குறித்து எஞ்சியுள்ள தடயங்களை அழிக்க முயற்சி நடைபெற்று வருகிறது, எனவே பாரபட்சமற்ற விசாரணைக்கு முதலமைச்சர் பழனிசாமி ஒத்துழைக்க வேண்டும்' என்று ஸ்டாலின் கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளையும் மறந்து விடுவார்கள் : அய்யாக்கண்ணு