Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவிற்கு கூட்டணி அழைப்பு விடுத்த மு.க.ஸ்டாலின்! – 37 கட்சிகளுக்கு கடிதம்!

Webdunia
புதன், 2 பிப்ரவரி 2022 (12:09 IST)
திமுக முன்னெடுக்கும் அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணைய அதிமுகவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்துள்ள நிலையில் தொடர்ந்து மத்தியில் ஆளும் பாஜக மேற்கொள்ளும் திட்டங்கல் பலவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. முக்கியமாக நீட் தேர்வு, மும்மொழி கொள்கை போன்றவை மாநிலங்கள் மீது திணிக்கப்படுவதாகவும், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது திமுக முன்னெடுக்கும் அனைத்திந்திய சமுகநீதிக் கூட்டமைப்பில் இணைய அழைப்பு விடுத்து தேசம் முழுவதும் உள்ள 37 கட்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் ”சமத்துவம், சமூக நீதி, சுயமரியாதையை ஆதரிக்கும் யாவரும் இந்த கூட்டமைப்பில் இணைய வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட மாநிலங்களின் வளர்ச்சியை பிற்போக்குசக்திகள் சவால் விடுகின்றன. இது அரசியல் பற்றியதல்ல. நம் அடையாளத்தை பற்றியது. மாநிலங்களாலான ஒன்றிய அமைப்பாக நாம் ஒன்று சேர்ந்தால்தான் மக்களுக்கான சமூகநீதியை பெற முடியும்” என தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அனுப்பியுள்ளது. தமிழக பாஜகவிற்கு கடிதம் அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments