இதுதான் எங்க மண்..! வாடிவாசலை குடியரசு தலைவருக்கு பரிசளித்த மு.க.ஸ்டாலின்!

Webdunia
திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (16:26 IST)
இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சுற்றுபயணமாக தமிழகம் வந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை வரவேற்று புத்தகங்களை பரிசளித்தார்.

தமிழகத்திற்கு 5 நாட்கள் சுற்றுபயணமாக வரும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெறும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பட திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திறங்கிய குடியரசு தலைவரை வரவேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் 6 தமிழ் புத்தகங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தகங்களை பரிசளித்தார்.

அவையாவன திருக்குறள், தலைமுறைகள் – நீல.பத்மநாபன், வாடிவாசல் – சி.சு.செல்லப்பா, செம்பருத்தி – தி.ஜானகிராமன், கரிசல் கதைகள் – கி.ரா, சுழலில் மிதக்கும் தீபங்கள் – ராஜம் கிருஷ்ணன். இதில் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் புத்தகத்தை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படம் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இன்று இணைகிறார் செங்கோட்டையன்.. அவருடன் இணைவது யார் யார்?

60 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் காற்றழுத்த தாழ்வு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

பணியில் இருந்த சிறப்பு காவல் படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

வங்கக்கடலில் புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு..!

வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு: 500 வீரர்களை அனுப்ப டிரம்ப் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments