தமிழகத்தில் பாஜக ஓபிசி அணி சார்பில் தினசரிகளில் வெளியாகியுள்ள விளம்பரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மருத்துவத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் 27% இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு நன்றி தெரிவித்து தமிழக பாஜக ஓபிசி அணி தினசரிகளில் விளம்பரம் வெளியிட்டுள்ளனர்.
பொதுவாக அரசு அலுவல்களில் ஓபிசி என்பது தமிழில் பிற்படுத்தப்பட்டோர் என்ற வார்த்தையாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அந்த விளம்பரத்தில் “பிற்படுத்தப்பட்டோர்” என்பதற்கு பதிலாக “பிற்பட்ட சமூகம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. ஆனால் இது திட்டமாக வெளியிடப்பட்டது அல்ல என்றும் எதிர்பாராத பிழையாக இருக்கலாம் என்றும் பாஜக வட்டாரங்களில் சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.