முதல்வர் என்றும் பாராமல்... சாதி சாக்கடை ஸ்டாலின்: தம்பிகள் அட்ராசிட்டி!

Webdunia
சனி, 20 நவம்பர் 2021 (08:53 IST)
தற்போது #சாதிசாக்கடை_ஸ்டாலின் என்ற ஹேஷ்கேட் நாம் தமிழர் கட்சியினரால் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. 

 
நடிகர் சூர்யா நடித்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான படம் ஜெய்பீம். இருளர் பழங்குடி மக்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் பலரது பாராட்டுகளை பெற்றது. அதேசமயம் இந்த படத்தின் வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்துள்ளதாக பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் இந்த சர்ச்சை விவகாரம் குறித்து பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அக்னி கலசம் வன்னியர் சங்கத்தின் முத்திரை என்பது உலகத்திற்கே தெரியும். அப்படியிருக்கும்போது அதை ஏன் ஜெய்பீம் படத்தில் வைக்க வேண்டும்? அக்னி கலசத்தை படத்தில் தவிர்த்திருக்கலாம். அன்புமணி சூர்யாவுக்கு எழுதிய கடிதத்தில் இருக்கும் வலி மற்றும் உண்மை தன்மையை மறுக்க முடியாது என கூறினார்.
 
இதற்காக சீமானை திமுகவினர் சமூக வலைத்தள பக்கத்தில் கேலி செய்தனர். இதன் விளைவாக தற்போது #சாதிசாக்கடை_ஸ்டாலின் என்ற ஹேஷ்கேட் நாம் தமிழர் கட்சியினரால் டிரெண்டாக்கப்பட்டு வருகிறது. இதன் கீழ் இரு போஸ்டர்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதோ அவை உங்கள் பார்வைக்கு... 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அதிமுகவுடன் கூட்டணி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய விஜய்?!.. அரசியல் பரபர...

அடுத்த கட்டுரையில்
Show comments