விஜயதசமிக்கு கோவில்கள் திறக்கப்படுமா? – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (08:29 IST)
விஜயதசமி அன்று கோவில்களை திறப்பது குறித்து இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக கொரோனா கட்டுப்பாடுகளால் வெள்ளிக்கிழமை கோவில்கள் மூடப்பட்டு வரும் நிலையில் விஜயதசமி என்பதால் இந்த வெள்ளிக்கிழமை மட்டும் கோவில்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்ட நிலையில் இதுகுறித்து தமிழக அரசே முடிவெடுக்கும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜயதசமிக்கு கோவில்களை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

மதுவை முன்பதிவு செய்ய மொபைல் செயலி.. இனி காத்திருக்காமல் மது வாங்கி செல்லலாம்..!

ரசிகர்கள் முன்னிலையில் கபடி வீரர் சுட்டுக்கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்..

அடுத்த கட்டுரையில்
Show comments