தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஹரீஸ் கல்யாண். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே என்ற  படத்தின் டிரைலர் ரிலீஸாகியுள்ளது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	தமிழ் சினிமாவில் இளம் நடிகர் ஹரீஸ் கல்யாண். இவர் தாராள பிரபு, பிரேமா காதல் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.
 
									
										
			        							
								
																	அறிமுக இயக்குநர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில், ஹரீஸ் கல்யான் நடித்துள்ள படம் ஓமணப்பெண்ணே. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.
 
									
											
									
			        							
								
																	தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பெல்லி சூப்பலு என்ற படத்தின் தமிழ்ரீமேக்கான ஓ மணப்பெண்ணே தற்போது ரிலீஸுக்குத் தயாராக உள்ள நிலையில்,வரும் அக்டோபர் 22 ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான ஹாட் ஸ்டாரில் ரிலீசாகவுள்ளது.
 
									
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று ரிலீஸாகியுள்ளது. இது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. டிரைலர் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளதால் இப்படம் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.#OhManaPenne