Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பையன் பிரச்சாரம் கிளம்பிட்டார்.. அப்பா ஜாலியா சைக்கிளிங் போறாரே! – வைரலாகும் ஸ்டாலின் போட்டோ!

Advertiesment
பையன் பிரச்சாரம் கிளம்பிட்டார்.. அப்பா ஜாலியா சைக்கிளிங் போறாரே! – வைரலாகும் ஸ்டாலின் போட்டோ!
, வியாழன், 19 நவம்பர் 2020 (11:58 IST)
தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேஷுவலாக சைக்கிளிங் செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் திமுக இந்த தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையில் கட்சியை வலுப்படுத்தி முன்னெடுத்து செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் திமுக உள்ள நிலையில், புதிய பொருளாளர், பொது செயலாளர்களுடன் இந்த தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளிங் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கட்சி சார்ந்த செயல்பாடுகளில் மு.க.ஸ்டாலின் கவனம் செலுத்தி வந்தாலும், இந்த தேர்தலில் உதயநிதி மீது ஒரு கவனத்தை ஏற்படுத்த திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக உதயநிதி ஸ்டாலின் நாளை முதல் 100 நாட்கள் தமிழகம் முழுவதும் சுற்றுபயண பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் சைக்கிளிங் போட்டோக்கள் அவர் என்றும் இளமையாக இருப்பதை குறிப்பதாக திமுகவினர் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கொரோனா! – சென்னையில் அதிர்ச்சி!