அதிமுகவுக்கு டெண்டர் ஆட்சி; மக்களுக்கு தெண்ட ஆட்சி! – ரைமிங்கில் ஆவேசமான ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (09:41 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ”தமிழகம் மீட்போம்” கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் அதிமுகவை டெண்டர் ஆட்சி என்று விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் “தமிழகம் மீட்போம் 2021” என்ற பெயரில் திமுக மாவட்ட நிர்வாகிகளோடு மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக உரையாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி நிர்வாகிகளோடு பேசிய அவர் ”சிறந்த நீர் மேலாண்மை மாநிலம் என பாராட்டு வாங்கிய முதல்வர் பழனிசாமியின் ஆட்சியில் சென்னை தண்ணீரில் மிதக்கிறது. சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருக்க கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் குவாரி டெண்டர்களில் அதிமுக முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ள அவர் அதிமுகவுக்கு இந்த ஆட்சி டெண்டர் ஆட்சியாக இருப்பதாகவும், மக்களுக்கு தெண்ட ஆட்சியாக அமைந்து விட்டதாகவும் பேசியுள்ளார். வேளாண் மசோதாவுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் போராட்டம் குறித்து பேசிய அவர் தமிழகத்தில் திமுக சார்பில் விரைவில் விவசாயிகளுக்கான போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்பாராத தோல்வி: பிகார் தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கருத்து

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இயக்குனர் வி.சேகர் காலமானர்!...

விஜய்க்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறாதா?!.. பொங்கிய நடிகை ரோஜா!...

வந்தே பாரத், தேஜஸ் ரயில்களில் உணவு கட்டாயமா? பயணிகள் மத்தியில் குழப்பம்!

தாம்பரம் அருகே விமானப்படை பயிற்சி விமானம் விபத்து: விமானிகள் என்ன ஆனார்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments