மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO".. மத்திய அரசுக்கு முக ஸ்டாலின் கண்டனம்..!

Siva
புதன், 19 நவம்பர் 2025 (09:40 IST)
கோயில் நகர்' மதுரைக்கும், 'தென்னிந்திய மான்செஸ்டர்' கோவைக்கும் "NO METRO" என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு என முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 
 
அனைவருக்கும் பொதுவானதாக செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சி கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
 
சென்னை மெட்ரோ பணிகளை தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம்! அதேபோல மதுரை & கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ இரயிலைக் கொண்டு வருவோம்!
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குச்சாவடி அலுவலர்களின் ஊதியம் அதிரடி உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.800 உயர்வு..!

பிரசாந்த் கிஷோர் நிலமைதான் விஜய்க்கும்!.. மறைமுகமாக சொன்ன தமிழிசை!...

இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வு மையம்.. சென்னையில் 3 நாட்களுக்கு பின் வெயில்..!

சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்.. கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தை பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments