Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உங்கள் தப்புக்கு மக்களை குறை சொல்லாதீங்க! – எடப்பாடியார் மீது எகிறிய ஸ்டாலின்!

உங்கள் தப்புக்கு மக்களை குறை சொல்லாதீங்க! – எடப்பாடியார் மீது எகிறிய ஸ்டாலின்!
, வியாழன், 14 மே 2020 (12:16 IST)
கோயம்பேடு சந்தையில் கொரோனா பரவியதற்கு வணிகர்களே காரணம் என முதல்வர் கூறியுள்ளதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ”கோயம்பேட்டில் கொரோனா தீவிரமடைந்ததற்கு வணிகர்களும், மக்களும் அரசுக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காததே காரணம்” என அவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” கொரோனா நோய்த்தொற்று குறித்து , சட்டப்பேரவையில் தி.மு.க. நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. ஆனால் அதிமுகவோ “கொரோனா தமிழ்நாட்டுக்கு வராது, வந்தாலும் ஆபத்தில்லை" என்றார்கள். நோய்த்தொற்று அதிகரித்து, உயிரிழப்புகளும் வளர்ந்து தொடரும் நிலையில், “நோய்த்தொற்றுடன் வாழப் பழகிக் கொள்ளவேண்டும்" என்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.
webdunia

மேலும் ”கொரோனா பரவாமல் செய்ய போதிய நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்காமல் இருந்துவிட்டு, கோயம்பேடு சந்தையை இடம் மாற்ற வணிகர்கள் ஒத்துழைப்பு தரவில்லை என முதல்வர் வியாபாரிகள் மீது பழி சுமத்துகிறார்.” என்று கூறியுள்ளார்.

போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறிய அதிமுக அரசின் நிர்வாக அலட்சியமே கொரோனா பரவலுக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ள மு.க.ஸ்டாலின் நிவாரண உதவியாக ஆயிரம் ரூபாய் வழங்கியதோடு அனைத்தும் முடிந்துவிட்டதாக எண்ணாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிகமும் இல்ல கம்மியும் இல்ல... மிட் ரேஞ்சில் அடக்கி வாசிக்கும் விவோ வி19!