ஆயிரத்தை நெருங்கும் இராயபுரம்! – அதிர்ச்சியளிக்கும் சென்னை நிலவரம்!

வியாழன், 14 மே 2020 (10:58 IST)
கடந்த சில நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

சென்னையில் 890 கொரோனா பாதிப்புகளுடன் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் தொடர்ந்து உள்ளது. 2ஆம் இடத்தில் கோடம்பாக்கம் மண்டலம் உள்ளது. இங்கு 835 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. 3வது இடத்தில் உள்ள திரு.வி.க. நகர் மண்டலத்தில் 662 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது

4வது இடத்தில் உள்ள தேனாம்பேட்டை மண்டலத்தில் 564 பேருக்கும், 5வது இடத்தில் வளசரவாக்கம் மண்டலத்தில் 450 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தண்டையார்பேட்டையில் 402 பேருக்கும், அடையாறில் 290 பேருக்கும், அம்பத்தூரில் 254 பேருக்கும், திருவொற்றியூரில் 120 பேருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் கூடி வாழும் மக்கள்; சென்னை கொரோனா பரவலுக்கு இதுதான் காரணமா?