Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காமெடி பண்றதை விட்டுட்டு கொரோனாவை தடுங்க! – எடப்பாடியாருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (11:57 IST)
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று செய்தியாளர்கள் கூட்டம் நடத்திய நிலையில் அதுகுறித்து விமர்சித்துள்ளார் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்தும், ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “கொரோனாவால் தமிழகத்தில் ஏழை மக்கள் பாதிக்கப்படவில்லை. பெரும்பாலும் வசதியானவர்களே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்” என்று கூறியிருந்தார்.

முதல்வரின் இந்த கருத்து குறித்து விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”அரிய வர்க்க பேத கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனாவை தடுக்க முயற்சியுங்கள். அரசியல் சுயநலத்திற்காகவும், லாபத்திற்காகவும் மக்கள் உயிரோடு விளையாடாதீர்கள்” என கூறியுள்ளார்.

என்ன செய்தாலும் ஸ்டாலின் குறை கூறுவார் என முதல்வர் நேற்று கூறியிருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments