Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக தலைவர்களை சந்தித்த துரைமுருகன்? உதவி செய்தாரா ஓபிஎஸ்/

Advertiesment
பாஜக தலைவர்களை சந்தித்த துரைமுருகன்? உதவி செய்தாரா ஓபிஎஸ்/
, வியாழன், 31 அக்டோபர் 2019 (21:19 IST)
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்கும், திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களுக்கும் அவ்வப்போது சின்னச் சின்ன உரசல்கள் வந்து கொண்டிருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்து வரும் நிலையில் தற்போது துரைமுருகன் செய்த ஒரு காரியம், திமுக தலைவரை ரொம்பவே அப்செட் ஆக்கி இருப்பதாக கூறப்படுகிறது 
 
சமீபத்தில் தனது உடல்நிலை சரியில்லை என்றும் தனக்கு ஒரு வாரம் ஓய்வு வேண்டும் என்றும் முக ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துவிட்டு சொந்த ஊருக்கு போவதாக துரைமுருகன் தெரிவித்தாராம். ஆனால் அவர் சொந்த ஊருக்குச் செல்லாமல் டெல்லி சென்றதாகவும், டெல்லியில் பாஜக தலைவர்கள் ஒரு சிலரை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் முக ஸ்டாலின் அவர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது 
 
webdunia
அதுமட்டுமின்றி பாஜக தலைவர்கள் உடனான சந்திப்புக்கு துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் துரைமுருகனுக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து திமுக தலைமை மேலும் விசாரணை செய்தபோது வேலூர் தொகுதி பாராளுமன்ற தேர்தலின்போது வருமான வரித்துறையினர் கைப்பற்றிய பணம் குறித்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு பாஜக தலைவர்களுடன் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டெல்லி சென்றதாக கூறப்படுகிறது 
 
துரைமுருகன் குறித்து வெளியான இந்த தகவலால் திமுக தலைமை அதிருப்தி அடைந்திருப்பதாகவும், ஆனால் கருணாநிதிக்கு அடுத்த இடத்தில் இருந்த மூத்த தலைவர் என்பதால் இந்த விஷயத்தை பெரிதாக்க முக ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் போட்ட கண்டிஷனால் அதிர்ச்சியில் அதிமுகவினர்