குழந்தை சுஜித்தை மீட்க பல்வேறு வகைகளிலும் போராடியும் அரசை ஸ்டாலின் விமர்சிப்பது வருத்தமளிப்பதாக முதல்வர் கூறியுள்ளார்.
திருச்சி அருகே குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 4 நாட்கள் தொடர் போராட்டத்துக்கு பிறகு சடலமாகவே குழந்தையை மீட்க முடிந்தது. இது தமிழக அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
குழந்தையை இழந்து வாடிய குடும்பத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் அரசு சரியாக செயல்பட்டிருந்தால் குழந்தையை உயிரோடு மீட்டிருக்கலாம் என குற்றம் சாட்டினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
இதற்கு எதிர்வினையாற்றி அதிமுக அமைச்சர்கள் பலரும் பேசியிருந்தார்கள். இதுகுறித்து தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி “மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியினை கண்காணித்து வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. சிறுவனை மீட்க இவ்வளவு முயற்சிகள் செய்தும் இதுகுறித்து எதிர்க்கட்சித்தலைவர் காழ்ப்புணர்ச்சியோடு பேசிவருவது வருத்தமளிக்கிறது.” என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.