Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யார் வேண்டுமானாலும், எப்படி வேணாலும் ஜெயிக்கலாம் - மு.க. அழகிரி

Advertiesment
மு.க.அழகிரி
தமிழக சட்டசபைக்கான தேர்தல் வாக்கு பதிவு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. மகள் கூட்டம் கூட்டமாக வாக்கு சாவடி நோக்கி செல்கின்றனர். இன்று காலை 11 மணி நிலவரப்படி 37 சதவீதத்தை அடைந்தது.
 
இந்த நிலையில் வாக்கு செலுத்த வந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 
தற்போது தேர்தல் களம் மிகவும் சூடாக இருக்கிறது. அதேபோலவே வெளியே வெயிலின் தாக்கமும் மிக அதிகமாக இருக்கிறது என்றார்.
 
தேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகமாக அமையும் என்ற கேள்விக்கு, முடிவுகள் எப்படி இருக்கும் என்று உறுதியாகத் தெரியவில்லை  என வெளிப்படையாகத் தெரிவித்தார். நான் இது குறித்து ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்தத் தேர்தலில் யார் வேண்டுமானாலும், எப்படி வேணாலும் ஜெயிக்கலாம்  என்று கூறி தேர்தல் களத்தின் இழுபறி நிலையை சுட்டிக்காட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சி மாற்றம் வந்துக்கிட்டே இருக்கு!.. பிரேமலதாவாக மாறிய கமல்ஹாசன்!...