அத்திவரதர் குளத்திற்குள் சென்ற பிறகுதான் தமிழகத்திற்கு நல்ல மழை பெய்யும் என ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதர், கடந்த ஜுலை 1 ஆம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார்.
அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து போகின்றனர். மேலும் ஆகஸ்டு 17 வரை பக்தர்களுக்கு காட்சித் தரவுள்ள அத்திவரதர், அதன்பிறகு வழக்கம் போல் குளத்துக்குள் தஞ்சம் அடைகிறார்.
40 வருடங்களுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு இவ்வாறு காட்சித் தந்து வருகிறார் அத்திவரதர். இந்நிலையில் அத்திவரதர் மீண்டும் குளத்திற்குள் சென்ற பிறகு என்ன நடக்கும் என ஜோதிடர் செல்வி கணித்துள்ளார்.
ஜோதிடர் ஷெல்வி இது குறித்து கூறியதாவது, அத்திவரதர் தன்னுடைய 40 வருடங்களுக்கு பிறகு வெளியே வந்து ஒரு மண்டலமாக பக்தர்களுக்கு ஆட்சியும் காட்சியும் கொடுத்து மீண்டும் குளத்திற்குள் சென்றவுடன் மழை பெரிய அளவில் இருக்கும். அதேபோல் மழையால் ஒரு கண்டம் இருக்கிறது எனவும் எச்சரித்துள்ளார்.