Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாறுவேடத்தில் ஆர்கே நகரில் ஸ்கூட்டரில் வலம் வரும் அமைச்சர்கள்: தமிழிசை புகார்!

மாறுவேடத்தில் ஆர்கே நகரில் ஸ்கூட்டரில் வலம் வரும் அமைச்சர்கள்: தமிழிசை புகார்!

Advertiesment
மாறுவேடத்தில் ஆர்கே நகரில் ஸ்கூட்டரில் வலம் வரும் அமைச்சர்கள்: தமிழிசை புகார்!
, திங்கள், 11 டிசம்பர் 2017 (14:07 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி பணப்பட்டுவாடா செய்வதாக புகார் வாசித்து வருகிறது. இந்நிலையில் அமைச்சர்கள் மாறுவேடத்தில் ஆர்கே நகரில் வலம் வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஆர்கே நகர் இடைத்தேர்தல் கடந்த முறை பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டு, தற்போது அந்த தொகுதிக்கு வரும் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் அரசியல் கட்சிகள் பலவும் சுறுசுறுப்பாக தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது.
 
இந்நிலையில் ஆர்கே நகரில் மீண்டும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை கூறிவருகிறார். கடந்த சனிக்கிழமை இதனை கண்டித்து அவர் அந்த தொகுதி பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதனையடுத்து பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளிக்க இன்று தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்தார்.
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா அதிகரித்துள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுக்கு புறம்பாக பூத் சிலிப்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அமைச்சர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு ஸ்கூட்டரில் வலம் வருகின்றனர். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமித்ஷா நினைத்தால் இன்றே ஆட்சி மாற்றம்: எச்.ராஜா பேச்சால் பரபரப்பு