ரசிகர்களை நம்பி நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என இசையமைப்பாளர் தேவா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு பல களோபரங்கள் மற்றும் திருப்பங்களுக்கு பின் நிராரிக்கப்பட்டது. அவரை முன்மொழிந்த இருவர் வேட்பு மனுவில் இருப்பது தங்களின் கையெழுத்து இல்லை எனக்கூறியதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் தேவா “ நடிகர் விஷால் அரசியலில் ஈடுபடுவது ஆண்டவன் செயல், அது அவரது பூர்வ கர்மம், புண்ணியத்தை பொறுத்தது. நினைப்புதான் பொழப்பை கெடுக்கும். தெரிந்ததை விட்டவனும் கெட்டான், தெரியாததை தொட்டவனும் கெட்டான். கலைஞர்கள், நடிகர்களுக்கு எழும் கை தட்டல், ஓட்டுகளாக மாறாது. எனவே, அதை நம்பி அரசியலுக்கு வருவது முட்டாள்தனம்” என தெரிவித்தார்.