Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமைச்சர்கள் பாதுகாப்பானது என கூறினால் எப்படி ஏற்றுக்கொள்வது? மக்கள் கேள்வி

Advertiesment
அமைச்சர்கள் பாதுகாப்பானது என கூறினால் எப்படி ஏற்றுக்கொள்வது? மக்கள் கேள்வி
, திங்கள், 27 பிப்ரவரி 2017 (17:51 IST)
கூடங்குளம் அணு உலை முதல் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என அனைத்து திட்டமும் பாதுகாப்பனது என மத்திய அரசுகள் பாதுகாப்பனது என்றே குரல் கொடுத்து வருகின்றனர். 


 

 
பொதுமக்களுக்கும், இயற்கைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து திட்டத்தையும் செயல்படுத்தி வரும் மத்திய அரசுகள், அத்திட்டங்களால் பாதிப்பு இருக்காது, பாதுகாப்பானது என குரல் கொடுத்து வருகின்றனர். கூடங்குளம் அணு உலைக்கு ஆதரவு தெரிவித்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் ஹட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கூடங்குளம் திட்டத்தை நிறைவேற்றியே தீர்வோம் என கூறினார். இன்று அதே நாராயணசாமி காரைக்கல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புதுச்சேரி மாநில அரசு அனுமதிக்காது என கூறியுள்ளார்.
 
அரசியல்வாதிகள் தங்கள் ஆட்சி என்றால் ஆதரவு அளிப்பதும், வேறு கட்சி ஆட்சியென்றால் எதிர்ப்பு தெரிவிப்பதும் வழக்கமான காரியமாக இருந்து வருகிறது. இந்நிலையில் அரசு சார்பாக அமைச்சர்கள் இந்த ஹைட்ரோ கார்பன் திட்டம் பாதுகாப்பனது என கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பட்டு வருகிறது. 
 
இவர்கள் பேச்சை எந்த நம்பிக்கையில் ஏற்றுக்கொள்ள முடியும். அனைத்திற்கு விளைவுகள் உண்டு. அந்த விளைவுகள் தீமை, நன்மை என்ற இரண்டிலும் அடங்கும். நன்மையை விட தீமை அதிகம் உள்ள திட்டங்களை நிறைவேற்ற ஏன் மத்திய இவ்வளவு ஆர்வம் செலுத்தி வருகின்றது. 
 
போபாலில் மீத்தேன் விஷ வாயு கசிந்து சுமார் 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்தனர். அயல்நாடுகளில் தோண்டப்பட்ட மீத்தேன் கிணறுகளை மூட முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தியா இப்போதுதான் அணு உலை மின்சாரம், மீத்தேன், ஹட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் இறங்கியுள்ளது. இதன் விளைவு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அயல் நாடுகளில் இதுபோன்ற திட்டங்களால் ஏற்பட்ட விபத்துகளையும், அழிவுகளையும் கண்டு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் இந்தியா. ஆனால் அதற்கு பதிலாக இங்கும் சோதனை செய்து பார்க்கலாம் என்ற முடிவில் உள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரே திட்டினாலும் வெட்கமே இல்லாத எம்எல்ஏக்கள்: கழுவி ஊற்றிய ஆர்.ஜே. பாலாஜி! (வீடியோ இணைப்பு)