Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊரே திட்டினாலும் வெட்கமே இல்லாத எம்எல்ஏக்கள்: கழுவி ஊற்றிய ஆர்.ஜே. பாலாஜி! (வீடியோ இணைப்பு)

ஊரே திட்டினாலும் வெட்கமே இல்லாத எம்எல்ஏக்கள்: கழுவி ஊற்றிய ஆர்.ஜே. பாலாஜி! (வீடியோ இணைப்பு)

Advertiesment
ஊரே திட்டினாலும் வெட்கமே இல்லாத எம்எல்ஏக்கள்: கழுவி ஊற்றிய ஆர்.ஜே. பாலாஜி! (வீடியோ இணைப்பு)
, திங்கள், 27 பிப்ரவரி 2017 (16:56 IST)
சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட எம்எல்ஏக்களை பொதுமக்கள் சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர். சில இடங்களில் எதிர்ப்பு தெரிவித்து அவர்களை தொகுதிக்குள் வர வேண்டாம் விரட்டுகின்ற சம்பவங்களும் நடக்கின்றன.


 
 
இந்நிலையில் பல்வேறு தமிழக பிரச்சனைகளில் கருத்து சொல்லும் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில், இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
அதில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி, வெட்கம், மானம், சூடு, சொரணை, பயம், சாதாரண குடும்ப வாழ்க்கையில் இருக்கும் யாரும் அரசியலுக்கு வர மாட்டார்கள். அய்யய்யோ ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு பயம் காரணமாக சாதாரண வாழ்க்கை வாழும் யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள்.

 
 
சமீபத்தில் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை ஏற்பட்ட போது ஏண்டா கேவலமாக இப்படி அடுச்சுக்கிறீங்க என வாய் தவறி பதற்றத்தில் கூறினேன். அதுவும் மாணவர்கள் பத்திரமாக வீட்டுக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கூறியதாக கூறினார்.
 
ஆனல் அதற்கே ஒரு 10, 20 பேர் என்னை திட்டினார்கள். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, வருத்தப்பட்டேன். ஆனால் இன்னைக்கு தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு எம்எல்ஏவையும், ஒவ்வொரு அரசியல்வாதியையும் ஊரே திட்டுது, நாடே திட்டுது அசிங்கப்படுத்தது. ஆனால் இவங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே கிடையாது என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குறிப்பிட்ட கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி சுசூகி!!