ஸ்டாலின் கூறுவது தவறான தகவல்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (16:14 IST)
சமீபத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழ் நாட்டு மருத்துவ கல்லூரி ரேங்க் பட்டியலில் பிற மாநில மாணவர்கள் பெயர் இடம் பெற்றது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். தமிழக மாணவர்கள் பட்டியலில் வெளிமாநில மாணவர்கள் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
தமிழக மாணவர்கள் பட்டியலில் கேரள மாணவி ஒருவரும், தெலுங்கானா மாநில மாணவர்களும் இடம்பெற்றிருந்ததாக முக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். 
 
இந்த நிலையில் இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக முக ஸ்டாலின் கூறுவது தவறான தகவல் என்றும் ஸ்டாலின் குற்றச்சாட்டிய மாணவி கேரளத்தை பூர்வீகமாக கொண்ட நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவர் விளக்கமளித்தார். ஒருவேளை முறைகேட்டில் யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments